தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்-திமுக கூட்டணி

புதுச்சேரி மாநிலத்தில் 17 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

News image
Updated On :19 மே 2016, 10:05 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 17 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

பேரவை பொதுத் தேர்தல் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ்-திமுக, பாஜக, பாமக, மக்கள் நலக்கூட்டணி என 6 அணிகள் தேர்தலில் போட்டியிட்டன. கடும் போட்டி நிலவிய நிலையில் மொத்தம் 84.08 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 5 மையங்களில் வியாழக்கிழமை நடந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதியிலும், திமுக 9 இடத்திலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

ஆளும் கட்சியான என்ஆர்.காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது என்ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தலா ஒவ்வொரு இடங்களை கைப்பற்றியதால் பரபரப்பு நிலவியது. ஆனால் இறுதியில் காங்கிரஸ் திமுக கூட்டணி தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 17 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியில் காமராஜர் நகர்- வைத்திலிங்கம், லாஸ்பேட்டை- சிவகொழுந்து, ஏம்பலம்- கந்தசாமி, ஏனாம்- மல்லாடிகிருஷ்ணாராவ், நெல்லித்தோப்பு- ஜான்குமார், அரியாங்குப்பம்- ஜெயமூர்த்தி, வில்லியனூர்- நமச்சிவாயம், மணவெளி- அனந்தராமன், நெட்டபாக்கம்- விஜயவேணி, காலாப்பட்டு- ஷாஜகான், ராஜ்பவன்- லட்சுமிநாராயணன், திருநள்ளாறு- கமலகண்ணன், உழவர்கரை-  பாலன், ஊசுடு- தீப்பாய்ந்தான், பாகூர்- தனவேலு, திமுக சார்பில் உருளையன்பேட்டை- சிவா, நிரவிதிருபட்டினம்- கீதாஆனந்தன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறது.

ஆளும்கட்சியான என்ஆர்.காங்கிரஸ் இந்திராநகர்- ரங்கசாமி, காரைக்கால் வடக்கு- திருமுருகன், கதிர்காமம்- ஜெயபால், மண்ணாடிப்பட்டு- செல்வம், மங்கலம்- சுகுமாறன், நெடுங்காடு- சந்திரபிரியங்கா, தட்டாஞ்சாவடி- அசோக்ஆனந்தன், திருபுவனை- கோபிகா ஆகியோர் மட்டுமே வென்றதால் ஆட்சியை இழந்தது.

அதிமுக சார்பில் உப்பளம்- அன்பழகன், முதலியார்பேட்டை- பாஸ்கர், முத்தியால்பேட்டை- வையாபுரி மணிகண்டன், காரைக்கால் தெற்கு- அசனா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மாகி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியை காங்கிரசின் கோட்டையாக மாற்றியுள்ளது. இந்த வெற்றியை காங்கிரஸ், திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.