கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா

யார் உண்மையான தேசியவாதிகள்? : கர்நாடக முதல்வர்

தேசிய விடுதலையில் பங்குபெற்றோர் யார்? - முதல்வர் சித்தாரமையா கேள்வி

கர்நாடக முதல்வர் சித்தாரமையா, பாரதிய ஜனதா கட்சி நாட்டுக்கான விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் போல பங்கேற்கவில்லை என்றும் காங்கிரஸார் தான் உண்மையான தேசியவாதிகள் எனவும் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் முதல்வர், “நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், சிறைக்கு சென்றவர்கள் உண்மையான தேசியவாதிகள் இல்லையா? எனில் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தேசியவாதிகளா" என கேள்வி எழுப்பினார்.

மேலும், “பாஜக தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்கான வரலாறு எதுவுமில்லை. நமது போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற பிறகு அவர்கள் தங்களைத் தேசியவாதிகள் என சொல்லிக் கொள்கின்றனர். இந்திய வரலாறு யார் உண்மையான தேசியவாதிகள் யார் எனச் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் போஜ கவுடா இடைமறிக்க முயன்றபோது, "நீங்கள் மதச்சார்பற்று இருந்தால் இங்கே வாருங்கள். பிரிவினைவாதியாக இருந்தால் அங்கேயே இருங்கள்” எனத் தெரிவித்தார்.

கர்நாடக சட்டப் பேரவையில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.12 தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com