காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு
ANI

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

கர்நாடகத்தில் காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுமுறை - கர்நாடக டிஜிபி உத்தரவு!
Published on

கர்நாடகத்தில் காவல்துறையினர் பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாற் அம்மாநில டிஜிபி.

கர்நாடக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) எம். ஏ. சலீம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளைக் கொண்டாட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிபியின் இந்தப் புதிய உத்தரவு காவலர்களின் மன அழுத்தத்திலிருந்தும், பணிச் சுமையிலிருந்தும் விடுபட பேருதவியாக இருந்து அவர்கள் மன, உடல்நலம் சிறக்க முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளதாகவும், இந்த உத்தரவு, காவலர்கள் மட்டுமில்லாது அவர்தம் குடும்பங்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Karnataka Police Personnel To Get Leave On Birthdays & Anniversaries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com