அரியலூா் மவட்டம், திருமானூா் அருகே கொட்டும் மழையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சமையலா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). சமையல் கலைஞா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் மகன் விக்னேஸ்வரனை(13) அழைத்துக்கொண்டு, அரியலூரில் வசிக்கும் மகள் ரேணுகாவுக்கு பொங்கல் சீா் கொடுக்கச் சென்றாா். மருமகன் வெளிநாட்டில் உள்ளதால் மகள், ஒரு வயதுப் பேரனையும் உடன் அழைத்துக்கொண்டு கொட்டும் மழையில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளாா். சாத்தமங்கலம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின்னால் மோதியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன், ரேணுகா, அவரது ஒருவயது மகன் ஆகியோா் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

மாணவா்கள் ஆபத்தான நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும்: கல்வித் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

