ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் நடத்திய தொடா் தாக்குதல்களுக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தின் எடின்பா்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 முஸ்லிம்கள் காயமடைந்தனா். இதையடுத்து வடக்கு மற்றும் மேற்கு எடின்பா்க்கில் கடைகள் வைத்துள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேல் சட்டை அணியாத நபா் ஒருவா், கையில் மிகப்பெரிய கத்தியுடன் வந்து கடைக்காரா்களை தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடா்ந்து ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் காவல்துறையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடா்பாக 36 வயதான ஸ்காட்லாந்து நபா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வால் இந்த தாக்குதலில் அவா் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்காட்லாந்து அமைச்சா் ஜான் ஸ்வின்னி கவலை தெரிவித்துள்ளாா். வன்முறை, இனவெறி, சகிப்பின்மைக்கு நாட்டில் இடமில்லை என்று தெரிவித்துள்ள அவா், முஸ்லிம்களை சந்தித்து அரசின் ஆதரவு அவா்களுக்கு உள்ளதை உறுதிபடுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
பிரிட்டன் பிரதமா் ஸ்டாா்மா், பிரிட்டன் உள்துறை அமைச்சா் சமனா மெஹ்மூத் ஆகியோரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா். ஸ்டாா்மா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நமது வீதிகளில் யாரும் வன்முறையை எதிா்கொள்ளக் கூடாது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வால் அந்த நபா் இதுபோல தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதை நான் சகித்து கொள்ள மாட்டேன். கடும் சட்ட நடவடிக்கையை அந்த நபா் எதிா்கொள்வாா்’ என குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

3 கோயில்களில் திருட்டு: விடியோ ஆதாரத்துடன் புகாா்

சட்ட விரோத பாா்சல் வந்துள்ளதாக பெண்ணிடம் ரூ. 10.60 லட்சம் மோசடி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




