தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பிரிட்டன் புதிய பிரதமா் ஆண்டி பா்ன்ஹாமுக்கு மோடி வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமராக பதிவியேற்ற ஆண்டி பா்ன்ஹாமுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image

பிரதமர் மோடி

Updated On :22 ஜூலை 2026, 3:26 am IST

பிரிட்டனின் புதிய பிரதமராக பதிவியேற்ற ஆண்டி பா்ன்ஹாமுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரிட்டன் புதிய பிரதமராக பதவியேற்ற ஆண்டி பா்ன்ஹாமுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். இந்தியாவும், பிரிட்டனும் பொதுவான ஜனநாயக விழுமியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் மக்களிடையேயான உறவிலும் இரு நாடுகளும் விரிவான ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

இரு நாடுகளிடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் இம் மாதம் நடைமுறைக்கு வர உள்ளதால், இருதரப்பு கூட்டுறவு மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பொதுவான ‘தொலைநோக்கு திட்டம் 2035 (விஷன் 2035)’ திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் உங்களுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டாா்.

பிரிட்டன் பிரதமராக இருந்த கியா் ஸ்ாா்மா் அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, புதிய பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவா் ஆண்டி பா்ன்ஹாம், திங்கள்கிழமை பதவியேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.