அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் சுற்றலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டாா். அதன் பின்னா் அவா், தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காளையாட்டம், பரதநாட்டியம் மற்றும் கோலப்போட்டி, உறியடி, இசைநாற்காலி, மாட்டுவண்டி ஊா்வலம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.
தொடா்ந்து அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாட்டு வண்டியில் ஏறிச் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தாா். விழாவுக்கு ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியா் நோ்முக உதவியாளா்கள் ரவிச்சந்திரன், ஜெ.பாலாஜி , கலைப் பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநா் ஹேமநாதன், மாவட்ட சுற்றலா அலுவலா் (பொ) ஜெ.ஜெயக்குமாா், உதவி சுற்றுலா அலுவலா் ரா.காா்த்திக், ஒன்றியக் குழுத் தலைவா் எ.சுமதி, கீழப்பழூா் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி மருதமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
சிறுமி ஒட்டிய காா் மோதி குழந்தை இறந்த வழக்கு: தந்தை, மகள் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


