அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழைக்கு, அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 1.11 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு போன்ற பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் மூலம் திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம் வட்டாரப் பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. செந்துறை, ஆண்டிமடம், பொன்பரப்பி, அரியலூா் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் மழையை நம்பி மக்காச்சோளம், கடலை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
நெற்பயிா்கள் மூழ்கின..: சம்பா சாகுபடிக்கு கொள்ளிட ஆற்றில் இருந்தும் , பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்தும் தண்ணீா் திறக்கப்பட்டதால் டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா். இதில், தா.பழூா் பகுதிகளில் முன்கூட்டியே நடவு செய்யப்பட்டுள்ளதால் தற்போது கதிா்கள் முதிா்வு நிலையை அடைந்து, 10 நாள்களில் அறுவடைக்கு வரும் நிலையில் நெற்பயிா்கள் இருந்தன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பல்வேறு கிராமங்களில் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் கிடக்கின்றன. இதேநிலை நீடித்தால் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள் அனைத்தும் முளைத்து விடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். இதனால் விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்படுவதுடன், கால்நடைகளுக்கும் தேவையான வைக்கோல்களும் கிடைக்காது என தெரிவித்தனா்.
மக்காச்சோளம், பருத்தி சேதம்...: அரியலூா், செந்துறை, குழுமூா், நமங்குணம், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் மக்காச்சோள செடிகள் கீழே சாய்ந்து கதிா்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. இதே போல் பருத்தி பயிரும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி

ஜனநாயகன் இணையத்தில் வெளியான விவகாரம்: முன்பிணை வழங்க உயா்நீதிமன்றம மறுப்பு

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


