எங்களுடைய மகள் பள்ளிப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறாள். வீட்டில் மிகவும் குழப்பமாக உள்ளது. இவரது படிப்பு, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், மதுரை

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. கல்வி ஸ்தானாதிபதியான சூரியபகவான் உச்சம் பெற்றிருக்கிறார்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. கல்வி ஸ்தானாதிபதியான சூரியபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் நட்பு ஸ்தானாதிபதி, தைரியாதிபதி மற்றும் ராகுபகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் அஷ்டமஹா நாகயோகத்தைப் பெற்றிருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. அதனால் படிப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவரின் போக்கிலேயே சென்று திருத்தவும். மற்றபடி தந்தையுடன் பேசாமலிருக்க வேண்டும் என்று கூறுவது தவறு. 2020- ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு அவரின் வாழ்க்கையில் குழப்பங்கள் மறைந்து தெளிவு உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் 
துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.