மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

என் மகனுக்கு இரண்டு தாரம் என்றும் ராகு, கேது தோஷம் உள்ளதாகவும் ஜோதிடர் கூறுகிறார். காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய மனைவி அமைவார்? பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டா? வேறு பாரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகி, ஆம்பூர்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

Published On :

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மேலும் குருபகவானின் பார்வை குடும்பாதிபதியின் மீதும் பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியின் மீதும் படிவதால் அவரின் வாழ்க்கை சீராகவே செல்லும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதால் மாளவிகா யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற தைரியாதிபதியுடன் இணைந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு இருதார தோஷம் இல்லை. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வும் கிடைத்துவிடும். சர்ப்ப சாந்தி செய்தால் மட்டுமே போதுமானது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.