
37 வயதாகும் எனது மகனுக்கு 5 வருடங்களுக்கும் மேலாக திருமணத்திற்கு முயற்சித்து வருகிறேன். இதுவரை பெண் அமையவில்லை. நிறைய பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், மடிப்பாக்கம்
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். களத்திர நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபவகான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் தைரிய
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். களத்திர நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபவகான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் தைரிய ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார். அதேநேரம் களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. மற்றபடி தற்சமயம் ஆறாம் வீட்டில் மறைந்து இருக்கும் லக்ன, சுகாதிபதியான புதபகவானின் தசை நடப்பது சிறப்பாகும். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். நீங்கள் இதுவரை செய்துள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





