விரைவில் குணமடைவார்
என் மகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் குணமடைந்தார். தற்போது உடல் நலம் குன்றி மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக எப்பொழுது குணமடைவார்?


என் மகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் குணமடைந்தார். தற்போது உடல் நலம் குன்றி மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக எப்பொழுது குணமடைவார்? அவர் மீண்டும் வேலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
வாசகர், தஞ்சாவூர்.
உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் குடும்ப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள அயன ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். ஐந்தாமதிபதி, ஆறாமதிபதியான சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து சுக்கிர பகவானையும், ஆறாமதிபதியான குரு பகவானையும் பார்வை செய்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். பொதுவாக வலிப்பு நோய்க்கு குருபகவானின் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள மூளையிலிருந்து செல்லும் கட்டளைகளைச் சரிவர நரம்புகள் எடுத்துச் செல்லாததே காரணமாகும் என்பார்கள். புதபகவான் குரு பகவானின் சாரத்தில் இருப்பது சிறப்பு. குரு பகவானும் சனி பகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். அவருக்கு பத்து வருடங்களாக பாதிப்பு இல்லாமல் இருந்த வலிப்புநோய் சூரிய பகவானின் தசையில் சனி பகவானின் புக்தியில் மறுபடியும் வந்தது. மற்றபடி தற்சமயம் புத பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் நான்கு மாதத்திற்குள் இந்த நிலையிலிருந்து குணமடைந்து விடுவார். மறுபடியும் வேலைக்குச் செல்வார். தொடர்வதும் லாபாதிபதியின் புக்தியாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...