என் மகன் கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சிப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எப்பொழுது நிரந்தர வேலை கிடைக்கும்? அவர் விரும்பும் பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும்? எதிர்காலம், குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமையும்?
வாசகர், பாண்டி.
உங்கள் மகனுக்கு மகர லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம், குடும்பாதிபதி தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். லாபஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன், பாக்கியாதிபதியான புத பகவானும் (தர்மகர்மாதிபதி யோகம்), சூரிய, குரு பகவான்களும் (சிவராஜயோகம்) இணைந்து இருக்கிறார்கள். மேலும் புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. சுக, லாபாதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திர பகவானும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இதனால் பெüர்ணமி யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. இதனால் அவருக்கு படித்த நல்ல வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மண வாழ்க்கை சிறப்பாக அமையும். தொழில் ஸ்தானத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்று சச மஹா யோகத்தைப் பெறுவதால் இறுதிவரை உயர்வான பதவியில் இருப்பார். தற்சமயம் பலம் பெற்ற குரு மஹா தசை நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படிப்புக்கேற்ற நிரந்தர வேலையும், அவர் விரும்பும் பெண்ணுடன் திருமணமும் கைகூடும். எதிர்காலம், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








