மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளது

எனக்கு 24 வயதாகிறது. பிஇ மெக்கானிக்கல் படித்துள்ளேன். நிரந்தர வேலை கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைக்குமா? பூர்விகச் சொத்து பாகப்பிரிவினையாகி வீடு கட்டும் யோகம் உள்ளதா?

Updated On :19 ஜூன் 2020, 12:47 pm

எனக்கு 24 வயதாகிறது. பிஇ மெக்கானிக்கல் படித்துள்ளேன். நிரந்தர வேலை கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைக்குமா? பூர்விகச் சொத்து பாகப்பிரிவினையாகி வீடு கட்டும் யோகம் உள்ளதா?

-வாசகர், திருக்கோகர்ணம்.

உங்களுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் கேந்திராதிபத்யம் நீங்கப் பெற்று அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்) ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குருமங்கள யோகம்) பார்வை செய்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று புத சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இது ஒரு சிறப்பான இணைவு என்று கூறவேண்டும். ராகு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிலும் கேது பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான சூரிய மகா தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு அரசு வேலை கிடைக்கும். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் பூர்வீகச் சொத்து கிடைத்து விடும். சொந்த வீடு கட்டும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.