இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பலமான அஸ்திவாரம்!

என் மகன் ஒன்றரை வயதில் தெரியாமல் ஒரு கிளாஸ் மண்ணெண்ணெயைக் குடித்துவிட்டான்.

News image
Updated On :2 அக்டோபர் 2020, 2:31 pm

தினமணி

என் மகன் ஒன்றரை வயதில் தெரியாமல் ஒரு கிளாஸ் மண்ணெண்ணெயைக் குடித்துவிட்டான். அப்பொழுது பொறைக்கேறிதால் மண்ணெண்ணெய் மூளைக்குச் சென்று படுத்த படுக்கையாகி, காக்காய் வலிப்பு அவ்வப்போது வந்தது. எட்டு வயதில் குணமடைந்தார். தற்போது 16 வயது நடக்கிறது. ஒரு கடையில் வேலைக்குச் சென்று வருகிறார். எதற்கெடுத்தாலும் கோபம் மிகவும் பயங்கரமாக வருகிறது. அவர் எப்பொழுது கோபம் மறைந்து சாந்தமடைவார்? 

-வாசகி, அம்பத்தூர்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்களான இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி உச்ச மூலத் திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார்.
தர்மகர்மாதிபதியான சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் ஆட்சி பெறுகிறார். இதனால் மூன்று திரிகோணாதிபதிகளும் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார்கள் என்று கூறவேண்டும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
ஏழாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான்  (ரிஷப லக்னத்திற்கு அரை சுபராகக் கருதப்படுபவர்) பன்னிரண்டாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பத்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்), சந்திர பகவானின் மீதும் (கஜகேசரி யோகம்) ஒன்பதாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குரு மங்கள யோகம்) ராகு பகவானின் மீதும் படிகிறது. ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியிலும், கேது பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியிலும் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு ஜாதகத்திற்கு அஸ்திவாரமாக கருதப்படுவது லக்னம், லக்னாதிபதியின் சுப பலமாகும். அவருக்கு லக்னம் சுத்தமாகவும், லக்னாதிபதி ஆறாம் வீட்டிற்கதிபதி உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும். 
 இதனால் உடல் நலம், மன வளம் இரண்டும் பெரிதாகப் பாதிக்கப்படாது என்று உறுதியாகக் கூறலாம். ஆகவே, சிறுவயதில் ஏற்பட்ட காக்காய் வலிப்பு நோய் முழுவதுமாக குணமாகிவிட்டது. 
செவ்வாய்பகவான் வீரத்திற்கும், தைரியத்திற்கும், கோபத்திற்கும், துணிவுக்கும் உரிய கிரகமாவார். செவ்வாய் பகவானுடன் ராகு பகவான் இணைந்திருப்பது அஷ்ட மஹா நாக யோகமென்றாலும், அயன ஸ்தானத்தில் இணைந்திருப்பதால் "சனிவத் ராகு' என்கிற ஜோதிட அடிப்படையில் சனி பகவான் கொடுக்க வேண்டிய அசுப பலன்களை ராகு பகவான் கொடுத்தார். 
செவ்வாய் பகவான் நட்பு ராசிக்கு விரோதி ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் அனாவசிய சண்டை உண்டாகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் ராகு மஹா தசை நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இவரின் மனநிலையில் மாற்றம் உண்டாகி, சாந்தமாகி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.