என் மகளுக்கு ஜாதகப்படி திருமண காலம் வந்து விட்டதா? எப்பொழுது, எந்தத் திசையிலிருந்து வரன் அமைந்து திருமணம் நடக்கும்? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
- வாசகர், ஹைதராபாத்
உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதி புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றிருக்கும் சனி பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதி, அயன ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான், உச்சம் பெற்றுள்ள ஆறு, பதினொன்றாமதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார்.
செவ்வாய் பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதால் பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் குரு மஹா தசையில் சுக்கிர புக்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் தூரத்து உறவில், வடகிழக்கு திசையிலிருந்து, படித்த நல்ல வருமானம் உள்ள வரன் அமைந்து திருமணம் நிச்சயமாகும். அடுத்த ஆண்டு வைகாசி மாதத்தில் திருமணம் கைகூடும். பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் வலுத்திருப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

