மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என் பேரனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவருக்கு தகுதியான வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?

என் பேரனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவருக்கு தகுதியான வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 10:08 am

DIN

என் பேரனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவருக்கு தகுதியான வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகர், அம்பாசமுத்திரம்.

உங்கள் பேரனுக்கு கடக லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி சந்திர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சனி பகவானுடன் இணைந்திருக்கிறார்.  சனிபகவானுக்கு சச மஹா யோகமும் உண்டாகிறது. லக்னத்தில் ஐந்து, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று, உச்சம் பெற்றுள்ள ஆறு, ஒன்பதாமதிபதியான குரு பகவானுடனும் இணைந்து குரு மங்கள யோகத்தைக் கொடுக்கிறார். இவர்களுடன் புத, சுக்கிர பகவான்களும் இணைந்திருக்கிறார்கள். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான், கேது பகவானுடன் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக வாழ்க்கையில் உயர்வு உண்டாகத் தொடங்கி விடும். இந்த ஆண்டே தகுதியான வேலை கிடைக்கும். 

2023 -ஆம் ஆண்டுக்குள் திருமணம் நடந்தேறும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.