என் மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டுமா?
-வாசகர், குளத்தூர்.
உங்கள் மூத்த மகனுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, லக்னத்தில் ஆட்சி பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். சுக்கிர பகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது படிவது சிறப்பாகும். தர்ம கர்மாதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலமர்ந்து இருப்பதால் திருமணம் தாமதமாகுமேயன்றி, நடக்காமல் போகாது.
களத்திர நட்பு ஸ்தானாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறு குறை என்றே கூற வேண்டும்.
ஏழாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும், தன் வீட்டிற்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது குறையைக் குறைக்கும் அம்சமாகும். அதோடு பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகமுமாகும். செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உள்ளதால் செவ்வாய் தோஷமில்லை.
தற்சமயம் புத பகவானின் தசையில் அயன ஸ்தானத்தில் புத பகவானுடன் இணைந்து உச்சம் பெற்றுள்ள சுகாதிபதி சூரிய பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

