தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எனக்கு 20 வயது இருக்கும்பொழுது ஒரு கலவரம் நடந்த இடத்தில் நானும் இருந்ததால், அதில் பங்கேற்றதாகக் கூறி, என் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

எனக்கு 20 வயது இருக்கும்பொழுது ஒரு கலவரம் நடந்த இடத்தில் நானும் இருந்ததால், அதில் பங்கேற்றதாகக் கூறி, என் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

Updated On :16 ஜூலை 2021, 11:28 am

எனக்கு 20 வயது இருக்கும்பொழுது ஒரு கலவரம் நடந்த இடத்தில் நானும் இருந்ததால், அதில் பங்கேற்றதாகக் கூறி, என் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதனால் அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த வழக்கு தற்சமயம் முடியும் தறுவாயில் உள்ளது. பல சிரமங்களுக்கிடையில் நான் போட்டித் தேர்வுகள் எழுத கடினமாக முயற்சித்து வருகிறேன். இந்த வழக்கு எப்பொழுது முடியும்? அரசு வேலை எனக்கு எப்பொழுது கிடைக்கும்? 

-வாசகர், மதுரை.

உங்களுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம் ஒன்றாம் பாதம். பாக்கியாதிபதி தன் வீட்டிற்குப் பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
சந்திர பகவான் எட்டாம் வீட்டில் சுபர் சாரத்தில் அமர்ந்திருந்தால் கைவிட்டுப் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்பது விதி.  சந்திர பகவானுக்கு கேந்திர ஸ்தானத்தில் (நான்காம் வீட்டில்) குரு பகவான் இருப்பது கஜகேசரி யோகமாகும். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்திலமர்ந்து (அஸ்தம் நட்சத்திரம்) நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. 
குரு பகவானின் ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும் (ஐந்தாமதிபதி ஐந்தாம் வீட்டைப் பார்வை செய்வது சிறப்பு) படிகிறது. 
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது. 
இந்த மூன்று குரு பார்வையினைப் பெறும் ராசிகள் சந்திர பகவானுக்கு (ராசிக்கு) 8, 10, 12-ஆம் எட்டாம் வீடு இடங்களாக அமைகிறதைப் பார்க்கிறோம். 
இதனால் ஜாதகர் தீர்க்காயுளுடன் (8-ஆம் வீடு), நிறைய சம்பாதித்து (10-ஆம் வீடு), சுப விரயங்களை (12-ஆம் வீடு) தான தர்மங்களைச் செய்து புகழ் அடைவார். 
சந்திர  ஆதி யோகம்: சந்திர பகவானுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் உண்டாகாது என்பதும் ஜோதிட விதி. சந்திர பகவானுக்கு ஆறாம் வீட்டில் சூரிய, புத, ராகு பகவான்களும், எட்டாம் வீட்டில் சனி, சுக்கிர பகவான்களும் இருப்பதால் சந்திர ஆதி யோகமும் உண்டாகிறது. 
லக்னம், ஆறாம் வீடான ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 
அதாவது குரு பகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதம்) அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லக்னத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்)அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
புத பகவானுக்கு லக்னத்தில் முழு பலம் உண்டாகும். இதை திக்பலம் என்பார்கள். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
இதனால் சிறப்பான புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. 
ராகு பகவான் லக்னத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
கேது பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். பொதுவாக வம்பு வழக்குகளுக்கு ஆறாம் வீட்டையும், ஆறாம் வீட்டோனின் சுப / அசுப பலத்தையும் பார்க்க வேண்டும். 
இதில் குறிப்பாக சண்டை சச்சரவுகளுக்கு செவ்வாய் பகவானையும், கோர்ட் வழக்கு விவகாரங்களுக்கு குருபகவானையும் பார்க்க வேண்டும். 
உங்களுக்கு ஆறாமதிபதி செவ்வாய் பகவானாகி நீச்சம் பெற்று இருப்பது குறை என்றாலும் "நீச்சபங்க ராஜயோகம்' பெற்றிருப்பது சிறப்பு. 
நீதித்துறைக்கு முதல் காரகத்துவம் வகிக்கும் குருபகவான் லாப ஸ்தானத்திலிருந்து, நீதிபதி என்று ஜோதிடத்தில் அழைக்கப்படும் சனி பகவானையும் பார்வை செய்வதால் உறுதியாக வழக்கிலிருந்து குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுவீர்கள். 
தற்சமயம் சனி பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நடக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழக்கிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். 
அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட துறையில் வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.