ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

என் மனைவியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவருக்கு அசாத்தியமான கோபம் வருகிறது. செயலுக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு ஏச்சும் பேச்சும் உள்ளது.

என் மனைவியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவருக்கு அசாத்தியமான கோபம் வருகிறது. செயலுக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு ஏச்சும் பேச்சும் உள்ளது. நல்ல வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

Updated On :25 ஜூன் 2021, 11:03 am

என் மனைவியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவருக்கு அசாத்தியமான கோபம் வருகிறது. செயலுக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு ஏச்சும் பேச்சும் உள்ளது. நல்ல வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். தைராய்டு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமாம், இல்லையேல் புற்றுநோய் வரலாம் என்கிறார்கள். என்ன செய்யலாம்..? பரிகாரம் கூறவும்..!

வாசகர், தஞ்சாவூர்.

உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னம், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது விபரீத ராஜ யோகம் என்றாலும், லக்னாதிபதி தன் வீட்டிற்கு மறைவு ஸ்தானத்தில் இருப்பதைக் குறை என்றே கூற வேண்டும். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 

ஒரு திரிகோணாதிபதி உச்ச கேந்திரத்தில் (பத்தாம் வீடு) அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் (கும்ப லக்னத்திற்கு ஒரு கேந்திரம், ஒரு திரிகோணத்திற்கு அதிபதியாவதால் யோக காரகர் ஆகிறார்) தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். 


ராசியில் பலமான கிரகம் நவாம்சத்தில் நீச்சம் அடைந்தால், பலம் குறைந்ததாகவே கருத வேண்டும். ஆறாமதிபதி சந்திர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 


களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச ராசியான மேஷ ராசியை அடைகிறார். 


நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். ஏழாம் அதிபதி கணவரைக் குறிப்பவராகையால் கணவரின் நிலை இறுதிவரை மேன்மையாகவே இருக்கும். அவரே பித்ரு காரகருமாவதால் தந்தையின் நிலையும் உயர்வாகவே அமையும். 


தனம், வாக்கு, குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 


இதனால் சிறப்பான சிவராஜ யோகம் உண்டாகிறது. இரண்டு, பதினொன்றாம் வீடுகள் தன ஸ்தானங்களாகி அந்த வீட்டிற்கதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீடான மற்றொரு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பாகும். 


குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னமான உயிர் ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் படிகிறது. 


தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். 


தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவானுடன் ஒன்பதாமதிபதியான சுக்கிர பகவானும் இணைந்திருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகமும் உண்டாகிறது. ராகு பகவான் சுக ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.


உடல் ஆரோக்கியத்திற்கு ஆறாம் வீட்டைப் பார்க்க வேண்டும். ஆறாமதிபதி குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்து, லக்னாதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். 


பொதுவாக லக்னாதிபதி ஆறாமதிபதியை விட பலம் கூடப் பெற்றிருக்க வேண்டும். அதாவது மறைவு ஸ்தானாதிபதிகளான 3, 6, 8, 12 -ஆம் அதிபதிகள் லக்னாதிபதியை விட பலம் குறைந்திருக்க வேண்டும். 


பஞ்ச பூதங்களைக் குறிக்கும் கிரகங்களான புத, சுக்கிர, சந்திர, சூரிய, செவ்வாய், சனி, குரு கிரகங்களில் எந்த கிரகம் பலமிழந்து காணப்படுகிறதோ அந்த கிரகத்திற்குரிய, காரகத்திற்குரிய நோய், உடல் உபாதைகள் உண்டாகும். அவருக்கு நீர்த் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் சுக்கிர பகவான் சிறிது பலமிழந்து இருப்பதாலும், ஹார்மோன் பிரச்னைகள் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திலுள்ளதால் தைராய்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. 


தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடப்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது நல்லது. வேறு பெரிய உபாதைகள் எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சிறப்பாக அமையும். முடிந்தால் ஒருமுறை திருவானைக்காவல் (நீர்த் தத்துவம்) சென்று அம்பாள்,  ஈஸ்வரனை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.