என் மூத்த மகன், மருமகள் ஜாதகங்கள் இணைத்துள்ளேன். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. எப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும்?

என் மூத்த மகன், மருமகள் ஜாதகங்கள் இணைத்துள்ளேன். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. எப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும்?

Updated On :

என் மூத்த மகன், மருமகள் ஜாதகங்கள் இணைத்துள்ளேன். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. எப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும்?

வாசகர், சேலம். 

உங்கள் மூத்த மகனுக்கு தனுசு லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம், லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனி, குரு, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் புத (புத ஆதித்ய யோகம்) பகவானுடனும், நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

இதனால் புத பகவானுக்கு பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான ஆட்சி பெற்ற சந்திர பகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். புத்திர காரகரான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பென்றாலும், அவருடன் சனி, ராகு பகவான்களின் இணைவு குறை. 

மற்றபடி குரு பகவானின் பார்வை லக்னம், புத்திர ஸ்தானங்களின் மீது படிவதால் புத்திர பாக்கியம் உண்டு. அவருக்கு தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிர பகவானின் தசையில் தர்ம கர்மாதிபதியான புத பகவானின் புக்தி நடப்பதும் சிறப்பாகும்.

உங்கள் மருமகளுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, பாக்கிய ஸ்தானத்தில் புத்திர ஸ்தானாதிபதி புத பகவான் மற்றும் கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 

குருபகவான் அயன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பாகும். அவருக்கு தற்சமயம் சந்திர பகவானின் தசையில் லக்னாதிபதியான சனி பகவானின் புக்தி நடப்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.