இந்தாண்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படங்கள்!
ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள்....

இந்தாண்டில் இதுவரை 9 திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.
தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு சொல்லத்தக்க நல்ல திரைப்படங்கள் அமைந்துள்ளன. வாரம் வாரம் நிறைய திரைப்படங்கள் வெளியீட்டைக் கண்டாலும் கடந்தாண்டை ஒப்பிட கதை ரீதியாக சில முயற்சிகளும் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளன.
இதில், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றியைப் பெற்றுள்ளன. அதிலும் இந்தாண்டில் இதுவரை நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 மற்றும் முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படங்கள் அதிகம் வசூலித்த திரைப்படங்களாக உள்ளன.
மேலும், சிவகார்த்திகேயனின் பராசக்தி, நடிகர் சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன், நடிகர் சூரியின் மண்டாடி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி, நடிகர் தனுஷின் ஓ.ம் உள்பட 9 திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.
ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 850 கோடி வரை வசூலித்து இதுவரை வெளியான தமிழ்த்திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. ஆச்சரியமாக, நடிகர் சூர்யா அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
So far this year, 9 films have grossed over Rs. 100 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


