புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

என் மகள் ஜாதகத்தில் அஸ்தாங்கத தோஷம் உள்ளதா? மேற்படிப்பு படிக்க விரும்புகிறார், படிக்க வைக்கலாமா? அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம், மண வாழ்க்கை எவ்வாறு அமையும்? 

என் மகள் ஜாதகத்தில் அஸ்தாங்கத தோஷம் உள்ளதா? மேற்படிப்பு படிக்க விரும்புகிறார், படிக்க வைக்கலாமா? அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம், மண வாழ்க்கை எவ்வாறு அமையும்? 

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 11:34 am

DIN

என் மகள் ஜாதகத்தில் அஸ்தாங்கத தோஷம் உள்ளதா? மேற்படிப்பு படிக்க விரும்புகிறார், படிக்க வைக்கலாமா? அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம், மண வாழ்க்கை எவ்வாறு அமையும்? 

-செல்வராமன், விழுப்புரம். 

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாம் வீட்டிற்கதிபதி சுக்கிர பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். 

லக்னாதிபதியுடன் சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பு. அஸ்தாங்கத தோஷமில்லை. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவானுடன் இணைந்திருக்கிறார். 

தர்ம கர்மாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானின் மீதும், ராகு பகவானின் மீதும் படிகிறது. 

தற்சமயம் சூரிய மஹா தசையில் ராகு பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். அவருக்கு இந்தக் காலகட்டத்தில் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு சம்பந்தப்பட்ட வேலையும் கிடைக்கும். மேற்படிப்பு தற்சமயம் வேண்டாம். எதிர்காலம் வளமாக அமையும். மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.