புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பட்டப்படிப்பு படித்திருந்தும் எனக்குத் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்திலும் நிம்மதி இல்லை. எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? எனக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறதா?

பட்டப்படிப்பு படித்திருந்தும் எனக்குத் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்திலும் நிம்மதி இல்லை. எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? எனக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறதா?

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 11:33 am

DIN

பட்டப்படிப்பு படித்திருந்தும் எனக்குத் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்திலும் நிம்மதி இல்லை. எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? எனக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறதா?

-வாசகி, ஈரோடு. 

உங்களுக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானாதிபதி சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றிருப்பது மேலும் சிறப்பாகும். 

ஐந்தாமதிபதி, எட்டாமதிபதி புத பகவான் ஏழாமதிபதியான சூரிய பகவானுடன் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். சுக பாக்கியாதிபதி சுக்கிர பகவான் லக்னத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். 

இரண்டு, பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் செவ்வாய், ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 

தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால், உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி பெருகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.