சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

செப்டம்பர் மாதப் பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

monthly predictions
Updated On :

கிரகநிலை

ராசியில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

01.09.2026 அன்று சுக்கிரன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03.09.2026 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2026 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20.09.2026 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23.09.2026 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் கூடும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

ரேவதி:

இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.

 பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 14, 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 06, 07    

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.