வார பலன்கள் (நவ. 20 - 26) - மகரம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மூத்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளிடம் எதிரிகள் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்.
பெண்கள் ஆன்மிகத்திலும் திருமண காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

