தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

உங்கள் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? வார ராசி பலன்கள் (அக். 16 - 22)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

ஜோதிடம்

astro - file photo

Updated On :

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (அக். 16 - 22) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

பெண்கள் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் உயர்வாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் பொருள்களை கடனுக்கு விற்பதைக் குறைத்துக் கொள்வீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறை யினர் சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் உடனுக்குடன் பாடங்களைப் படித்து உயர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 16, 17, 18.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

புத்திசாலித்தனம் கூடும். நேர்மறை, எதிர்மறை எதிர்ப்புகள் மறையும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றி மறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை சீரிய முறையில் பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி கட்சிப் பணியாற்றி நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் வேறு துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்களின் செல்வாக்கு குடும்பத்தில் உயரும். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 19, 20.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை வசூலிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய உத்திகளைச் செயல்படுத்துவீர்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் இருந்த சங்கடங்கள் குறையும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலன் அடைவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - 21, 22.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

படிப்படியாகத் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வழக்குகள் சாதமான திருப்பத்தை அடையும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் இருக்கும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழலைக் காண்பீர்கள். விவசாயிகள் சிறிய முதலீட்டில் விவசாய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினர் மிடுக்குடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

பெண்களின் ஆலோசனைகளை குழந்தைகள் கேட்பார்கள். மாணவர்கள் நண்பர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கரிசனத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்காத பொருள்களை விலையைக் குறைத்து விற்பீர்கள்.

விவசாயிகளுக்குக் கால்நடைப் பராமரிப்புச் செலவுகள் குறையும். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் நட்பாகப் பழகுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவியுடன் ஒப்பந்தங்களை நல்லபடியாகச் செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் இக்கட்டான தருணங்களில் சமயோஜிதமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும். விவசாயிகள் சரியான நேரத்தில் தேவையற்ற களைகளை நீக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் பயனற்ற விவாதங்களைச் செய்ய மாட்டீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள்.

பெண்கள் சகோதரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குழந்தைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பெயர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்படும். வியாபாரிகளுக்கு தெளிவான சிந்தனையால் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் தானிய விற்பனையில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்காலத்துக்காக புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பெண்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் லட்சியங்களை நோக்கிப் பயணிப்பீர்கள். சுய பரிசோதனை செய்து தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரெடுப்பீர்கள். வியாபாரிகள் தனித்துச் செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களின்போது புதிய அறிமுகங்கள் ஏற்படும். கலைத்துறையினர் சிறிது கஷ்டப்பட்டாலும் அதற்குரிய பலன் கிடைக்கும்.

பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பயணங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும்.

உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளு குறைய சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி விஷயங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த ஏற்ற வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குடும்ப வருவாயைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கை உயரும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கிளை அலுவலகங்களுக்குப் பயணம் செய்து மற்ற ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படும்.

அரசியல்வாதிகள் பொறுப்புடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைத் தேடாமலேயே பெறுவீர்கள்.

பெண்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நுட்பமான விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களின் கடன் விண்ணப்பங்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். வியாபாரிகள் தங்கள் கருத்துக்குச் செவிசாய்ப்பார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிட்டு விளைச்சலை அதிகரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் இருக்கும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பீர்கள்.

பெண்கள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (October 16 - 22). Read and benefit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER