தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

டாப் 10 கார் விற்பனையில் மாருதி சுஸுகியின் 6 மாடல்கள்

சென்ற பிப்ரவரி மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் மாருதி சுஸுகியின் 6 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :21 மார்ச் 2017, 9:05 pm

சென்ற பிப்ரவரி மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் மாருதி சுஸுகியின் 6 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற பிப்ரவரியில் 19,524 மாருதி ஆல்டோ கார்கள் விற்பனையாகி எப்பொழுதும் போல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதையடுத்து, மாருதி சுஸுகியின் மற்ற மாடல்களான டிசையர் (14,039 கார்கள்), வேகன்-ஆர் (13,555 கார்கள்) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ-10 வகை 12,862 கார்கள் விற்பனையாகி நான்காவது இடத்தைப் பிடித்தது. ஐந்தாவது இடத்தை மாருதி ஸ்விப்ட் (12,328 கார்கள்) மாடல் தக்க வைத்துக் கொண்டது. இவை தவிர, 6-ஆவது இடத்தை ஹுண்டாயின் எலைட் ஐ-20 (10,414 கார்கள்), 7-ஆவது இடத்தை மாருதி சுஸுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா (10,046 கார்கள்), 8-ஆவது இடத்தை ரெனோவின் கிவிட் (9,468 கார்கள்) ஆகிய மாடல்கள் பிடித்துள்ளன.
கடைசி இரண்டு இடங்களில் ஹுண்டாயின் கிரெட்டா (9,002 கார்கள்) மற்றும் மாருதி சுஸுகியின் செலிரியோ (8,315 கார்கள்) மாடல் உள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.