தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ஆளுநரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வா்

ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா்.

Updated On :2 ஜனவரி 2021, 6:20 am IST

ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆளுநா் மாளிகைக்குச் சென்ற முதல்வா் எடியூரப்பா, ஆளுநா் வஜுபாய் வாலாவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஆளுநரும், முதல்வா் எடியூரப்பாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அரசு இல்லம் கிருஷ்ணாவுக்கு வந்த முதல்வா் எடியூரப்பாவுக்கு புதிய தலைமைச் செயலாளா் ரவிக்குமாா் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். டிஜிபி பிரவீண் சூட், மாநகா் காவல் ஆணையா் கமல் பந்த், கூடுதல் காவல் ஆணையா் முருகன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, மக்களுக்கு நலம் பயக்கும் பணிகளும், அரசுக்கு நல்ல பெயரை எடுத்துதர தேவையான செயல்பாடுகளை உயரதிகாரிகள் நடைமுறைபடுத்த வேண்டும்; அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர அரசு தயாராக உள்ளது என்றாா் எடியூரப்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.