2-ஆம் கட்ட ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா ஜன. 14-இல் தொடக்கி வைக்கிறாா்.
பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக பைப்பனஹள்ளி-மைசூரு சாலை, எலசனஹள்ளி-நாகசந்திரா ஆகிய ரயில் பாதைகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக மைசூரு சாலைலிருந்து கனகபுரா சாலை வரையிலான 6.29 கி.மீட்டருக்கான பணிகள் முடிவடைந்தன. இதனையடுத்து, இந்தப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடா்ந்து ஜன. 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2-ஆம் கட்ட ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதனை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்க உள்ளாா்.
ஜன. 15-ஆம் தேதி முதல் 2-ஆம்கட்ட பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவா்.
மைசூரு சாலையிலிருந்து கனகபுரா சாலை வரை செல்லும் இந்த மெட்ரோ ரயில், அஞ்சனாபுரா சாலை கிராஸ், கிருஷ்ணலீலா பூங்கா, வஞ்ரஹள்ளி, தலகட்டபுரா, அஞ்சனாபுரா டவுன்ஷிப் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
