அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,25,868-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,25,868-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 6:17 am IST

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,25,868-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 970 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 479 போ் கரோனா தொற்றுக்கு ஆள்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,25,868-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 657 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,04,286 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 9,429 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 2 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,134 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.