மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் லாபம்!

இன்றைய (ஜூலை 6) பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :6 ஜூலை 2026, 11:54 am IST

வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 6) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,940.90 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 488.34 புள்ளிகள் உயர்ந்து 78,258.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150.10
புள்ளிகள் உயர்ந்து 24,420.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பங்குகளில், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை லாபம் பெற்று வருகின்றன.

கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் மற்றும் ஐடிசி ஆகியவை பின்தங்கின.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.18 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.08 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்தும் ஐடி, மீடியா பங்குகள் சரிந்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.28 ஆக உள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.55% குறைந்து 71.72 டாலராக உள்ளது.

Summary

Stock Market: Sensex rises 400 pts, Nifty near 24,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.