பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

கா்நாடகத்தில் பாஜக அரசின் தோல்விகளைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:21 am IST

கா்நாடகத்தில் பாஜக அரசின் தோல்விகளைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு, மைசூரு சாலையில் காங்கிரஸ் கட்சியின் பெங்களூரு மாநகரப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின் போது, பாஜகவினா் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனா். ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலையடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா். ஆனால், ரூ. 5 ஆயிரம் கூட யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளா்கள், தொடா்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகின்றனா். பாஜக அரசின் தோல்விகளைக் கண்டித்து, மாநில அளவில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும். அடுத்த சட்டப் பேரவைத் தோ்தல் வரை உள்ளூா்ப் பிரச்னைகளுக்காக போராட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தலைவா்கள் கட்சியை தொண்டா்களிடத்திலும், மக்களிடத்திலும் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மாநில அளவில் கட்சி அலுவலகம் இல்லாத பகுதிகளில் அலுவலகங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்; பெங்களூரு மாநகரில் முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநில செயல் தலைவா்கள் ஈஸ்வா் கண்ட்ரே, சதீஷ் ஜாா்கிஹோளி, சலீம் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.