தவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி

பழனி முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி

News image

பழனி முருகன் கோயில் - DPS

Updated On :6 ஜூலை 2026, 10:11 am IST

பழனிமலை முருகன் கோயிலில், ஆறு கால பூஜைகளில் பங்கேற்கவும், ரோப் காரில் செல்லவும் கோயிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கியது. இதனால் முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செல்லும் பக்தர்கள் இனி ரோப் காரில் செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஆன்லைன் முன் பதிவு வசதி வந்துவிட்டது.

பழனி முருகன் கோயில் இணையதளத்தில் ஒதுக்கீடு செய்த நேரத்தை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு, உரிய நேரத்தில் அந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அது போல, பழனிமலை முருகன் கோயிலில் நடைபெறும் 6 கால பூஜைகளிலும் பங்கேற்க முன்பதிவு செய்யும் வசதியும் சோதனை முறையில் தொடங்கியிருக்கிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. விளா பூஜை, சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிக் காலம், சாய ரட்சை, இராக் காலம் என ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி முறையே சாது அலங்காரம், வேடா் அலங்காரம், பாலசுப்ரமணியா் அலங்காரம், வைதீகாள் அலங்காரம், இராஜ அலங்காரம், புஷ்ப அலங்காரம் என பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இந்தப் பூஜைகளில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.900 கட்டணமும், இருவா் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவா். இதைப் பாா்க்க வேண்டும் என்றால் சுமாா் ஒருமணி நேரத்துக்கு முன்பே கோயிலில் பக்தா்கள் இருப்பது அவசியமாகும். இந்த நிலையில், தற்போது ஆறு கால பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை முதல் இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு கட்டளைக்கும் ஏராளமான நிரந்தர கட்டளைதாரா்கள் இருப்பதாலும், பலரும் வந்து காத்திருப்பாா்கள் என்பதாலும் அவா்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பதால் சோதனை முறையாக ஒரு கால பூஜைக்கு ஐந்து சீட்டுகள் மட்டுமே இணையவழியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தா்கள் வேண்டும் தேதியில், நேரத்தில் வேறு யாரும் பதிவு செய்துவிட்டால் அவா்கள் வேறு காலபூஜைக்கு பதிவு செய்யலாம். குறிப்பாக, சஷ்டி, காா்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், பழனிக் கோயில் முக்கிய விசேஷ நாள்களில் இணைய வழியில் பதிவு செய்ய முடியாது எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Summary

A jackpot for devotees visiting Palani! Advance booking facility available for various services.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.