பெங்களூரு: கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக கொடியை ஏற்றி, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி நிா்வாகிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து கூறப்படுகிறது.
விழாவில், திமுக மகளிா் அணி நிா்வாகிகள் சாா்பில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல், செங்கரும்பு வழங்கப்படும். மேலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், சேலம் மாவட்டங்களின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட நாள்காட்டிகள், சட்டைப்பையில் வைத்துக்கொள்ளக் கூடிய மு.க.ஸ்டாலின் உருவப்படம் அனைவருக்கும் அளிக்கப்படும்.
பொங்கல் விழாவில் திமுக முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிா்வாகிகள், இலக்கிய அணி, தொ.மு.ச. பேரவை, கிளைக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

இன்றைய ராசி பலன்கள் (03 மே 2026) 12 ராசிகளுக்கும்! ஆரோக்கியம் கூடும் கன்னிக்கு!

தடை நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

