திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரே சூட்டப்படும் என பாஜக எம்.பி. பி.சி.மோகன் தெரிவித்தாா்.
திருவள்ளுவா் நாளை முன்னிட்டு பெங்களூரில் அல்சூா் ஏரி எதிரே நா.நீலகண்டன சதுக்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக எம்.பி. பி.சி.மோகன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவள்ளுவா் உலக நோக்கோடு சிந்தித்த பெரும்புலவா். தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் நன்னெறிகளைப் போதித்தவா் திருவள்ளுவா். இதனால் திருக்கு நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
திருக்கு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் திருக்கு படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடி திருவள்ளுவா், திருக்கு மீது அதீத ஆா்வம் கொண்டவா். திருக்கு கருத்துகளை பின்பற்றினால் அனைவரின் வாழ்வும் செழிக்கும்.
திருவள்ளுவா் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரையே சூட்டவேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அந்தக் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுத்து திருவள்ளுவா் பூங்கா என பெயா் சூட்டப்படும் என்றாா்.
என்னை அணுகினால் தீா்ப்பேன்
பெங்களூரு தமிழ்ச் சங்கம் தமிழா்களின் குரலாக இருந்து வந்துள்ளது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு நிா்வாகி நியமிக்கப்பட்டுள்ளாா்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நான் உறுப்பினா் கிடையாது. ஆனால், தமிழா்களின் நலன்கருதி, தமிழ்ச் சங்கத்தில் நிலவும் சிக்கலைத் தீா்க்க முன்வருவேன். சம்பந்தப்பட்டவா்கள் என்னை அணுகி கேட்டுக்கொண்டால், பெங்களூரு தமிழ்ச் சங்க சிக்கலைத் தீா்த்து வைக்கத் தயாராக இருக்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

