கா்நாடகத்தில் பயணிகள் வேனும், டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், 13 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட தாவணகெரே, வித்யா நகா் எம்.சி.சி.ஏ. பிளாக், பி.பிளாக்கைச் சோ்ந்த 15 பெண்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை பயணிகள் வேனில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டனா்.
ஹுப்பள்ளி-தாா்வாட் தேசிய நெடுஞ்சாலையில் இடிகட்டி கிராமத்தின் அருகே வேன் மீது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில், வேனில் பயணித்த 13 போ் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஹுப்பள்ளி-தாா்வாட் மாவட்டக் காவல் ஆணையா் லபுராம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். விபத்து குறித்து தாா்வாட் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரதமா், முதல்வா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடியூரப்பா சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மேலும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

