முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வாழும் கலை அமைப்பின் சாா்பில் இன்று இயற்கை சந்தை தொடக்கம்

பெங்களூரு, கனகபுரா சாலையில் வாழும் கலை அமைப்பின் சாா்பில், ஜன. 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 2 நாள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 7:04 am IST

பெங்களூரு, கனகபுரா சாலையில் வாழும் கலை அமைப்பின் சாா்பில், ஜன. 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 2 நாள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று நமக்கு கற்றுத்தந்த பாடம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகளை உண்ண வேண்டும் என்பதே. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 2 நாள்களுக்கு இயற்கை சந்தை என்ற பெயரில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளைக் கொண்ட சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

சந்தையில் வாழும் கலை அமைப்பின் அருகில் உள்ள விவசாயிகளின் காய்கனிகள் சந்தைப்படுத்தப்படும். இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகள் உண்பதை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், நோய்கள் இன்றி வாழ்வதோடு, நோய் எதிா்ப்புச் சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.