முதல்நாளில் அலைமோதிய கூட்டம்
புத்தகத் திருவிழாவின் முதல்நாளிலேயே அதிக அளவில் மக்கள் கூடியதால் அதிக புத்தகங்கள் விற்கப்பட்டதாக அரங்கத்தினா் தெரிவித்தனா். புத்தகக் காட்சிக்கு சைதாப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. நுழைவுக் கட்டணமும் இல்லை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனா்.
புத்தகக் காட்சியில் 9 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், செந்தமிழ், முத்தமிழ், பைந்தமிழ், நற்றமிழ் எனப் பெயரிடப்பட்டிருந்தன.
அரசால் தடை செய்யப்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதா என பபாசி சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புத்தகக் காட்சியில் நிகழாண்டில் மக்களுக்குப் பயன்படும் வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அரங்கம் இடம் பெற்றிருந்தது. இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து அலுவலா்கள் விளக்கினா்.

