

கண்மணி குணசேகரன்
கவிஞர், எழுத்தாளர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் கூறுவதுபோல, "எழுத்தில் நுழையும்போது, எழுத்தாளன் யார் முகத்தில் விழிக்கிறானோ, அவனது எழுத்தும் அவரது எழுத்தாகவே மாறிவிடும்' என்பதே உண்மை. நான் எனது பேராசிரியர் தா.பழமலய்யின் முகத்தில் விழித்தவன் என்பதால், எனது எழுத்தானது மண்ணும், மொழியுமாகவே ஆகிவிட்டது.
அதனடிப்படையில் நடுநாட்டுச் சொல் அகராதியை தொகுத்துள்ளேன். அதில் 4,000 சொற்களும், 400 பழமொழிகளும், 300 மரபுத் தொடர்களும் அமைந்துள்ளன. அதில் மக்கள் பயன்பாட்டு உரையாடலும் இடம் பெற்றுள்ளது.
நம்மாழ்வார் தனது பாடலில் "பல்லில் தெறித்த பாவியானேன்' என்ற சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார். அதாவது, கலியுகம் முடிந்து தான் பிறந்ததாகக் கூறும் நம்மாழ்வார், கலியுகம் முடிவதற்கு முன் பிறந்திருந்தால் இறைவனைக் கண்டிருக்கலாம் என்ற பொருளிலே அவர் அச்சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
அவரது அந்த வார்த்தையானது, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளான நடுநாட்டு மக்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாய் வரை சென்ற உணவு பல்லில் பட்டு தெறித்து கிடைக்காமல் போவதுபோல முக்கியமான விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றத்தை மக்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோலத்தான் எழுத்தும் காலங்கடந்து மக்களால் பேசப்படும் நிலையில் இருக்க வேண்டும்.
புத்தகக் காட்சியில் பொங்கல் கலை விழா
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பபாசியின் 49}ஆவது புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. அதில் சஞ்சு மகளிர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்று பொங்கலிட்டு கொண்டாடினர். நாட்டுப்புற வீரக் கலைகள் பயிற்சியாளர் பவர் பாண்டியன் தலைமையில் மாணவ, மாணவிகளின் சிலம்பம், களரி, வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வயிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.