ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated on
1 min read

காதி, கைத்தறி, கைவினைப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் அவர் பேசியதாவது,

”ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். ஜவுளித்துறையை சர்வதேச அளவில் போட்டியிட புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

காதி, கைத்தறி, கைவினைப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் தொடங்கப்படும்.

புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஜவுளித்துறை சார்ந்த திறன்களை மேம்படுத்த தொழில்துறை, கல்வித்துறை, இடையே ஒருங்கிணைப்பு திட்டம் கொண்டுவரப்படும்.

இயற்கை இழைகளில் தன்னிறைவுக்கான தேசிய இழைத் திட்டம். பாரம்பரியத் தொகுப்புகளை நவீனமயமாக்குவதற்கான ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும்” என்றார்.

Summary

Union Finance Minister Nirmala Sitharaman has announced new schemes to increase the production of Khadi, handloom, and handicraft products.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com