மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் அறிய.. தினமணி.காம் உடன் இணைந்திருங்கள்!
வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை! மத்திய பட்ஜெட்டில் தனிநபா் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ரூ. 53.47 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்! 7.7 சதவிகிதம் அதிகம்!!2026-27-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் ரூ.53.67 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா்.
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479 கோடி ஒதுக்கீடு!மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
16-ஆவது நிதிக் குழுப் பரிந்துரை ஏற்பு: மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41%-ஆக நீடிப்பு!16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு 41 சதவீதமாக நீடிக்க உள்ளது.
வங்கதேசத்துக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் ரூ.75,000 வரையிலான பொருள்களுக்கு வரி இல்லை!வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருள்களின் மதிப்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து!மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
அணுமின் உற்பத்தி திட்டங்கள்: 2035-ஆம் ஆண்டு வரை சுங்க வரி விலக்கு நீட்டிப்பு!அணுமின் உற்பத்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.