சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தேசிய அளவில் விவசாயிகளுக்கு டாஃபே நவீன இயந்திர பயிற்சி

வேளாண் இயந்திரமாக்கல் குறித்த அறிவினைப் பரப்பும் வகையில் டாஃபே நிறுவனம் தேசிய அளவில் விவசாயிகளுக்கு பயிற்சித் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதன் கீழ் மேகாலய மாநிலத்தைச் சேர்ந்த முதல் குழு பயிற்சி பெற்றுள்ளது.

Updated On :21 ஜூன் 2013, 5:45 pm

வேளாண் இயந்திரமாக்கல் குறித்த அறிவினைப் பரப்பும் வகையில் டாஃபே நிறுவனம் தேசிய அளவில் விவசாயிகளுக்கு பயிற்சித் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதன் கீழ் மேகாலய மாநிலத்தைச் சேர்ந்த முதல் குழு பயிற்சி பெற்றுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாஃபே, டிராக்டர்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்திலும் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமாகும். இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பயிற்சித் திட்டம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது:

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் நிர்வாகம், சிறப்பான நவீன வேளாண் பழக்கங்கள் ஆகியவற்றுடன் தரமான விதைகளையும் டாஃபே அளித்துவந்தது. இந்த செயல்பாடுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அலுவலர்களை குழுக்களாக வரவழைத்து, நவீன வேளாண் முறைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

இதன் கீழ், முதல் குழுவாக மேகாலய மாநிலத்திலிருந்து வேளாண் துறை அலுவலர்கள், பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர். அரிசி, காய்கறிகள், பழப்பயிர்கள், உரம் பயன்பாடு, நவீன் இயந்திரங்கள், புதிய வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மேகாலயத்துக்கு திரும்பிச் சென்று தங்கள் மாநில விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சியை அளிப்பார்கள். இந்த திட்டத்தின் மூலம், வேளாண் உற்பத்தி அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியவையும் நிறைவேறும்.

விவசாயிகளின் உற்பத்தித் திறன் மற்றும் வருவாயை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அதனை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ""ஜே ஃபார்ம்'' எனும் டாஃபே பண்ணையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. பெண் விவசாயிகளுக்கு டிராக்டர் ஓட்டுதல், வேளாண் நிர்வாகம் உள்ளிட்டவற்றில் பயிற்சியளிக்க டாஃபே நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.