மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மும்பை பங்குச் சந்தையில் 182 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 182 புள்ளிகள் உயர்ந்து

Updated On :2 ஜூலை 2013, 4:35 am IST

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 182 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 19,577 என்ற அளவைத் தொட்டது.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மும்பை பங்குச் சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. பருவ மழை சராசரி நிலைக்கும் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர்.

ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. வீட்டுவசதி, மின்சாரம், மூலதனப் பொருள்கள், வேகமாக விற்கும் நுகர்வோர் பொருள்கள், உலோகம் மற்றும் ஆட்டோ மொபைல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

இதன் மூலம், 182 புள்ளிகள் உயர்ந்து, ஒரு மாத அளவில் அதிகபட்சத அளவான 19,577 என்ற அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடி லாபம் ஈட்டினர் என்று கூறப்படுகிறது.

 இயற்கை எரிவாயு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்ததிலிருந்து எரிசக்தி துறை நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 1,124.31 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 56 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி குறியீட்டெண் 5,898 என்ற அளவில் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.