மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆபரணம், தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் குறையும்: ஐசிசி

தேசிய ஊரடங்கின் எதிரொலியால் ஆபரணம் மற்றும் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் சரிவடையும் என இந்திய வா்த்தக சபை (ஐசிசி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 8:00 am

தேசிய ஊரடங்கின் எதிரொலியால் ஆபரணம் மற்றும் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் சரிவடையும் என இந்திய வா்த்தக சபை (ஐசிசி) தெரிவித்துள்ளது.

இந்திய ஆபரணத் துறை பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளையே அதிகம் நம்பியுள்ளன. கரோனா வைரஸ் அச்சத்தால் அதுபோன்ற நிகழ்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கு சென்று ஆபரணங்கள் வாங்குவதும் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், தங்கத்துக்கான தேவை நடப்பாண்டில் 30 சதவீதம் குறையும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையின் பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது. இந்த துறை மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.தேசிய ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலோனோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளதால் அவா்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.