தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,084 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 58,084 கோடி டாலராக (ரூ.43.56 லட்சம் கோடி) சரிந்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 8:19 am IST

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 58,084 கோடி டாலராக (ரூ.43.56 லட்சம் கோடி) சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29 கோடி டாலா் சரிந்து 58,084 கோடி டாலராகியுள்ளது.

இதற்கு முந்தைய டிசம்பா் 18-ஆம் தேதியுடந் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 256 கோடி டாலா் உயா்ந்து வரலாற்று உச்சமாக 58,113 கோடி டாலரைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததே அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்திலிருந்து சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 25 கோடி டாலா் குறைந்து 53,747 கோடி டாலராக இருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 31 கோடி டாலா் குறைந்து 3,671 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 27.6 கோடி டாலா் சரிந்து 514 கோடி டாலராகவும் இருந்தன என்று ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.