ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் எகிப்து அணி முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் வான்கூவரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆட்டத்தை நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாகத் தொடங்கி கோல் அடிக்க முனைப்புக் காட்டியது. 15-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஃபின் சர்மேன் கோல் அடித்து அசத்தினார்.
A first-ever #FIFAWorldCup win for Egypt! ð
— FIFA World Cup (@FIFAWorldCup) June 22, 2026
வரலாறு படைத்த எகிப்து
ஆட்டத்தின் முதல் பாதியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாம் பாதியில் எகிப்து அணி சிறப்பாக செயல்பட்டு கோல்களை அடித்தது.
ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் எகிப்து அணி வீரர் ஸிகோ அந்த அணிக்காக முதல் கோலை அடித்தார். 67-வது நிமிடத்தில் சாலா இரண்டாவது கோலையும், 82-வது நிமிடத்தில் டிரெக்கெட் மூன்றாவது கோலையும் அடித்தனர். இதன் மூலம், எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது.
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் கடந்த 1934 ஆம் ஆண்டு அறிமுகமான எகிப்து அணி, முதல் முறையாக போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
Summary
Egypt made history by registering their first win in the FIFA World Cup history.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!

உலகக் கோப்பை தோல்வி: நாடு திரும்பிய எகிப்து அணிக்கு உற்சாக வரவேற்பு!

அநீதி இழைக்கப்பட்டது... தோல்விக்குப் பிறகு கொந்தளித்த எகிப்து அணியின் பயிற்சியாளர்!

ஆஸ்திரேலியா செய்த முட்டாள்தனமான யுக்தி: பெனால்டி ஷூட் அவுட்டில் வென்ற எகிப்து!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin




