FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

உலகக் கோப்பை தோல்வி: நாடு திரும்பிய எகிப்து அணிக்கு உற்சாக வரவேற்பு!

உலகக் கோப்பையில் தோல்விக்குப் பிறகு நாடு திரும்பிய எகிப்து அணிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து...

News image

நாடு திரும்பிய எகிப்து அணிக்கு உற்சாக வரவேற்பு. - படம்: ஏபி

Updated On :10 ஜூலை 2026, 9:25 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்ற பிறகு நாடு திரும்பிய எகிப்து அணிக்கு அதன் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்து அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றது. அதிலும் 78 நிமிஷங்கள் வரை 2-0 என முன்னிலை வகித்தது. கடைசி 13 நிமிஷங்களில் ஆட்டமே மாறியது.

இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய எகிப்து அணி நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் தோற்றாலும் பலரும் அந்த அணிக்கு ஆதரவு அளித்தார்கள்.

ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் வென்று முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் முன்னெற்றி சாதனை படைத்தது.

விஏஆர் தலையீடு, ஃபௌல் என ஃபிஃபா ஒருதலைப்பட்சமாக நடக்கிறது எனவும் அநீதி இழைத்துவிட்டதாகவும் எகிப்து கால்பந்து கழகம் அறிக்கை விட்டிருந்தது. இந்த நிலையில், நாடு திரும்பிய இந்த அணிக்கு எகிப்து மக்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள்.

ஃபிஃபாவின் நடுவர் குழுத் தலைவர் பியர்லூய்கி கொலினா விதிமுறைகள் சரியாகவே பின்பற்றப்படுகின்றன என விளக்கம் அளித்தார்.

Summary

Egypt''s soccer team gets a warm welcome home after World Cup loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.