காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அநீதி இழைக்கப்பட்டது... தோல்விக்குப் பிறகு கொந்தளித்த எகிப்து அணியின் பயிற்சியாளர்!

எகிப்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹாஸன் அளித்த பேட்டி குறித்து...

Referee Francois Letexier, of France, shows a red card to a staff member of the Egyptian team after Argentina scored their third goal during the World Cup round of 16 soccer match between Argentina and Egypt in Atlanta, Tuesday, July 7, 2026. (AP Photo/Colin Hubbard)

எகிப்து அணியின் பயிற்சியாளருக்கு ரெட் கார்டு வழங்கிய நடுவர். - படம்: ஏபி

Published On :

எகிப்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹோசம் ஹாஸன் ஃபிஃபா நிர்வாகம் லியோனல் மெஸ்ஸிக்கும் ஆர்ஜென்டீன அணிக்கும் ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றிரவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்து 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 78 நிமிஷங்கள் வரை எகிப்து 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர் 11 நிமிஷங்களில் ஆட்டம் 2-2 என சமனாகியது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் 2ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனா கோல் அடித்து 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நடுவராகச் செயல்பட்டவர்கள் ஆர்ஜென்டீனாவுக்குச் சாதகமாக செயல்படுவதாக எகிப்து அணியின் பயிற்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹோசம் ஹாஸன், “ஃபிஃபா நடப்பு சாம்பியனை தொடரில் தக்க வைக்க நினைக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் ஆர்ஜென்டீனாவுக்கு ஆதரவு கிடைக்கிறது. எங்களுக்கு மரியாதையோ அல்லது நியாயமான முடிவுகளோ எடுக்கப்படவில்லை. வீட்டுக்குச் சென்ற பின் உலகக் கோப்பையை பார்க்கபோவதில்லை” என்றார்.

இந்தப் போட்டியில் எகிப்து அடித்த ஒரு கோல் விஏஆர் மூலம் நீக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் பல மாற்றங்களை விஏஆர் மூலம் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது.

போட்டியின் கடைசி கட்ட நேரத்தில் எகிப்து பயிற்சியாளருக்கு ரெட் கார்டு (2 யெல்லோ கார்டு) வழங்கப்பட்டது. மற்றுமொரு பயிற்சியாளருக்கு யெல்லோ கார்டு வழங்கப்பட்டது.

எகிப்து அணியின் மற்றுமொரு பயிற்சியாளர் ஜிகோ, “எகிப்தின் பெனால்டி மறுக்கப்பட்டது. அது விஏஆர் மூலம் சரிபார்க்கப்படவில்லை. இரண்டாவது கோல் அற்புதமானது. அதனை ஏதோ காரணங்களால் நீக்கிவிட்டனர். மேக் அலிஸ்டர் உடையை பிடித்து இழுத்ததுக்கு விஏஆர் சரிபார்க்கவில்லை. வாழ்க்கை நியாயமற்றது, சாதாரண வாழ்க்கையும் நியாயமற்றதாக இருக்கையில் விளையாட்டில் மட்டும் எப்படி நியாயம் இருக்கும்?

இதைச் சொல்வதினால் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. இது திருடப்பட்ட வெற்றி. ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருந்தது. ஆர்ஜென் டீனா வெற்றி பெற விரும்பினால் மற்ற அணிகளை ஏன் விளையாட அழைக்கிறார்கள்?” எனக் கொந்தளித்துப் பேசினார்.

Summary

'Injustice Is Clear!': Egypt's Zico Accuses FIFA Of 'Fixing' World Cup For Argentina

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.