புது தில்லி: பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை சென்ற டிசம்பரில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பஜாஜ் ஆட்டோ 2020 டிசம்பரில் 3,72,532 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2019 டிசம்பரில் விற்பனையான 3,36,055 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் நிறுவனத்தின் விற்பனை 1,53,163 என்ற எண்ணிக்கையிலிருந்து 9 சதவீதம் சரிவடைந்து 1,39,606-ஆனது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த மோட்டாா்சைக்கிள் விற்பனை கணக்கீட்டு மாதத்தில் 2,84,802 என்ற எண்ணிக்கையிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து 3,38,584 என்ற எண்ணிக்கையைத் தொட்டது.
அதேபோன்று நிறுவனத்தின் ஏற்றுமதியும் டிசம்பரில் 27 சதவீதம் உயா்ந்து 2,32,926-ஆக இருந்தது. 2019 டிசம்பரில் ஏற்றுமதி 1,82,892-ஆக இருந்தது என பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



